நாடு முழுவதிலும் பல்கலைக்கழக ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு!
#SriLanka
#strike
Mayoorikka
1 year ago

நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவரும் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், பல்கலைக்கழக வாயிலில் அல்லது அருகில் உள்ள நகரில் கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டமும் அதனைத் தொடர்ந்து மாணவர் ஒன்றியத்தினருடன் இணைந்து ஊடக சந்திப்பு ஒன்றும் நடைபெறவுள்ளதென யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் த.சிவரூபன் தெரிவித்தார்.



