குளியாப்பிட்டிய இளைஞரின் கொலை விவகாரம் : காதலி கைது!

குளியாப்பிட்டியவில் உள்ள சிறுமியின் வீட்டுக்குச் சென்ற போது படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் குளியாப்பிட்டியை சேர்ந்த இளைஞரின் காதலியான 18 வயதுடைய யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கு உதவிய மற்றும் குற்றத்தை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காதலியின் வீட்டிற்கு சென்றிருந்த போது காணாமல் போன இளைஞனின் சடலம் கடந்த வாரம் மாதம்பே பனிரெண்டாவ பகுதியில் மீட்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி குளியாப்பிட்டிய இலுகென பிரதேசத்தில் குறித்த இளைஞன் காணாமல் போனதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
குளியாப்பிட்டிய, கபல்லேவ பகுதியைச் சேர்ந்த சுசிதா ஜயவன்ஷ, தனது காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
குறித்த வீட்டில் அவரது காதலியின் தந்தை மற்றும் கொத்தனார் என அடையாளம் காணப்பட்ட இருவர் தாக்கியிருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக, இந்த கொலை தொடர்பாக காதலியின் தந்தை மற்றும் தாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



