பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை!
#SriLanka
#Ranil wickremesinghe
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக அரசாங்கம் கொண்டு வந்துள்ள பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்படி தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், "அடுத்த ஆண்டு குறைந்தபட்சம் 3% வளர்ச்சி விகிதம் இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.
பின்னர், 3% வளர்ச்சி விகிதம் இருக்கும்போது, அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதிலும் எங்கள் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாங்கள் ஒரு நிலையை அடைந்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.



