அமெரிக்காவின் ஆயுதங்களை பயன்படுத்தி இஸ்ரேல் நடத்திய கொடூரம் : வெளியான அதிர்ச்சி தகவல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
அமெரிக்காவின் ஆயுதங்களை பயன்படுத்தி இஸ்ரேல் நடத்திய கொடூரம் : வெளியான அதிர்ச்சி தகவல்!

அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் மனிதாபிமானச் சட்டத்தை மீறியதாக அமெரிக்க அரசாங்கம் கூறுகிறது.  

அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களை இஸ்ரேல் சீரற்ற முறையில் பயன்படுத்தியதாக வெளிநாட்டு செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன. 

எவ்வாறாயினும், காஸா பகுதியில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் அசாதாரண இராணுவ சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.  

இந்த உண்மைகள் வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்டு அண்மையில் காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலேயே வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த அறிக்கை காசா பகுதியில் இஸ்ரேலின் நடவடிக்கைகளில் தெளிவான தாக்கத்தை ஏற்படுத்துவதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

சர்வதேச மனிதாபிமான சட்டத்தை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீறியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4