இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த சிறிதரன்!

#India #SriLanka #sritharan
Mayoorikka
1 year ago
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த சிறிதரன்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை நேற்று முன்தினம் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

 இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது எக்ஸ் பக்கத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

 இலங்கையின் தற்கால அரசியல் நிலவரம், வடக்கு, கிழக்கு அடங்கலாக இலங்கையில் இந்தியா முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்கள், பொருளாதார ஒத்துழைப்புத் திட்டங்களை மையப்படுத்திய விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 பிராந்திய மக்களுக்காக, இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதன்போது வலியுறுத்தியுள்ளார் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!