தைவானில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

#Earthquake #Thaiwan
Prasu
2 years ago
தைவானில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

தைவான் நாட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஹுலியன் மாகாணத்தின் கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. மேலும் ஹுலியன் கடற்பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 முன்னதாக, கடந்த மாத தொடக்கத்தில் தைவானின் தலைநகர் தைபேவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 7 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4