இங்கிலாந்தில் வட்டி விகிதங்கள் குறித்து வெளியான அறிவிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இங்கிலாந்தின் பாங்க் ஆஃப் இங்கிலாந்து 5.25 என்ற வட்டி விகிதத்தை நிலையாக பேண தீர்மானித்துள்ளது.
09 நபர்களைக் கொண்ட பணவியல் கொள்கைக் குழுவின் இரு உறுப்பினர்கள் குறைப்புக்கு சாதகமாக வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில் ஜுன் மாதத்தில் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கவர்னர் ஆண்ட்ரூ பெய்லி, பணவீக்கம் பற்றிய ஊக்கமளிக்கும் செய்திகளை நாங்கள் பெற்றுள்ளோம், அடுத்த இரண்டு மாதங்களில் இது எங்களின் 2% இலக்கை நெருங்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். வட்டி விகிதங்களைக் குறைக்கும் முன் பணவீக்கம் குறைவாக இருக்கும் என்பதற்கான கூடுதல் ஆதாரங்களைப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.