இந்தியாவுக்கான புதிய தூதரை நியமித்த சீன ஜனாதிபதி

#India #China #Ambassador #Appoint
Prasu
2 years ago
இந்தியாவுக்கான புதிய தூதரை நியமித்த சீன ஜனாதிபதி

இந்தியாவுக்கான சீன தூதராக சுன் வெய்டெங் பணியாற்றி வந்தார். இவரது பதவிக்காலம் 2022 அக்டோபர் மாதம் முடிவடைந்தது. அதன்பின் சீனா தூதரை நியமிக்காமல் இருந்தது. 

இதற்கு இரு நாடுகள் இடையிலான எல்லைத் தொடர்பான பிரச்சனை ஆகும். இந்த நிலையில் சுமார் ஒன்றரை வருடங்கள் கழித்து இந்தியாவுக்கான சீன தூதரை அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்தள்ளார்.

தற்போது இந்தியாவுக்கான சீன தூதராக அறிவிக்கப்பட்டுள்ள அதிகாரி பெயர் ஜு ஃபெய்ஹோங் ஆகும்.

60 வயதாகும் இவர் விரைவில் இந்தியா வந்து பதவி ஏற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இவர் ஆப்கானிஸ்தான், ருமேனியா போன்ற நாடுகளில் தூதராக பணியாற்றியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4