தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TELO) தலைவரின் 38வது நினைவேந்தல் நிகழ்வு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TELO) தலைவரின் 38வது நினைவேந்தல் நிகழ்வு!

1986ம் ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீசபாரத்தினம் அவர்களின் 38வது நினைவேந்தல் இன்று (06.05) மாலை 6மணியளவில் வவுனியாவில் உள்ள சிறீதமிழ் ஈழ விடுதலை (Sritelo) இயக்கத்தின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது. 

images/content-image/1715083668.jpg

இந்நிகழ்வு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான சங்கர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றிருந்ததுடன் முதலாவது ஈகைச்சுடரினையும் அவர் ஏற்றிவைத்திருந்தார்.

 அவரை தொடர்ந்து சிறீசபாரத்தினம் அவர்களின் மெய்ப்பாதுகாவலரும் ரெலோ அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவருமான அஜித் அவர்களும் கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 

images/content-image/1715083789.jpg

தொடர்ந்து தமிழ் விருட்சம் அமைப்பின் ஸ்தாபகர் கண்ணா, கலைஞர் மாணிக்கம் ஜெகன், சிறீதமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், இளைஞரணியினர் பிரதேச அமைப்பாளர்கள், என பலரும் கலந்து கொண்டு அஞ்சலியை செலுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!