இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகத்தை குறிவைத்து ஹேக்கர்கள் தாக்குதல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகத்தை குறிவைத்து இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதல் நடத்தப்பட்ட நாடு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சகம் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. ஆனால் இந்த தாக்குதலை சீன ஹேக்கர்கள் நிகழ்த்தியிருக்கலாம் என நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.
குறித்த சைபர் தாக்குதல் தற்போது சேவையில் உள்ள பணியாளர்கள், அவர்களுடன் சம்பளம் குறித்த தரவுகளை ஊடுறுவியதாக கூறப்படுகிறது.
பெரும்பாலும் பெயர்கள் மற்றும் வங்கி விவரங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் இன்று காமன்ஸில் ஒரு அறிக்கையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.