நீச்சல் சாதனை - தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடியை தாண்டிய வீரர்கள்

#India #SriLanka #Mannar #Player #Swim #Record
Prasu
2 years ago
நீச்சல் சாதனை - தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடியை தாண்டிய வீரர்கள்

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் தொடர் ஓட்ட முறையில் நீத்தி கடந்து 12 நீச்சல் வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் 12 நீச்சல் வீரர்கள், வீராங்கணைகள் தொடர் ஓட்ட முறையில் நீந்தி சாதனை படைத்துள்ளனர்.

மகாராஸ்ட்ரா மாநிலம் தானே பகுதியில் செயல்பட்டு வரும் ராம் சேது திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளையை சோந்நத மகராஸ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த 12 நீச்சல் வீரர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை உள்ள சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக்ஜலசந்தி கடற்பரப்பினை நீந்தி கடப்பதற்காக இந்திய வெளியுறவுதுறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புதுறை அமைச்சகத்திற்க்கு அனுமதி கோரியிருந்தனர்.

images/content-image/1714932306.jpg

இந்திய இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் வெள்ளிகிழமை பிற்பகல் ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து இரண்டு படகுகளில் தங்கள் நீச்சல் பயிற்சியாளர் தலைமையில் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் இலங்கை தலைமன்னார் சென்றனர்.

தலைமன்னாரிலிருந்து சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு கடலில் குதித்து தொடர் ஓட்ட முறையில் நீந்த தொடங்கி 12 பேரும் மாலை 4.40 மணியளவில் (10 மணி நேரம் 20 நிமிடங்களில் நீந்தி) தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியை வந்தடைந்து சாதனை படைத்துள்ளனர்.

images/content-image/1714932316.jpg

images/content-image/1714932329.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4