உலகின் மிகச் சிறந்த விமான நிலையங்களின் பட்டியல் வெளியீடு

#Airport #Singapore #Dubai #World #list
Prasu
2 years ago
உலகின் மிகச் சிறந்த விமான நிலையங்களின் பட்டியல் வெளியீடு

ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான உலகின் மிகச் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

முதலிடத்தை, கத்தார் – தோஹாவில் உள்ள ஹமாத் சர்வதேச விமான நிலையம் பிடித்து சாதித்துள்ளது. உலகின் இரண்டாவது மிகச் சிறந்த விமான நிலையமாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

சாங்கி விமான நிலையம் உலகின் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தாலும், ஆசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

பிராங்பேர்ட்டில் நடந்த விருது வழங்கும் விழாவில் உலகின் சிறந்த விமான நிலையங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த தரவரிசை பட்டியலில் கொரியாவின் இன்சியான் சர்வதேச விமான நிலையம் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது, அதே போல ஜப்பானின் ஹனேடா சர்வதேச விமான நிலையம் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

 சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் உலகின் சிறந்த குடிநுழைவு சேவைகளை வழங்கும் நிலையமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4