சிம்ம ராசியினருக்கு நேற்றைய எண்ணம் நிறைவேறும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 weeks ago
சிம்ம ராசியினருக்கு நேற்றைய எண்ணம் நிறைவேறும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பெரும் முயற்சியால் புதிய சொத்து வாங்குவீர்.பரணி: உங்கள் செயலில் வேகம் இருக்கும். வருமானத்திற்கு வழி காண்பீர். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை விலக்குவீர். உங்கள் முயற்சி பலிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். மேற்கொண்ட முயற்சி நிறைவேறும்.ரோகிணி: வரவேண்டிய பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்மிருகசீரிடம் 1,2: சுயதொழில் செய்து வருபவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: செயல்களில் குழப்பம் உண்டாகும். திட்டமிட்ட செயல் நன்மையில் முடியும். திருவாதிரை: யோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் குழப்பம் ஏற்படும். புனர்பூசம் 1,2,3: மற்றவர்கள் விஷயத்தில் யோசித்து செயல்படுவது நல்லது. கவனம் தேவை.

கடகம்

புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.பூசம்: பணியிடத்தில் வேலைபளு அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் சில சங்கடம் உண்டாகும்.ஆயில்யம்: குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது.

சிம்மம்

மகம்: நேற்றைய எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும். உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும்.பூரம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை அடைவீர். தொழிலில் இருந்த தடை விலகும்.உத்திரம் 1: பழைய கடன்கள் வசூலாகும். நில விவகாரத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சிப்பீர். வெளியூர் பயணம் லாபமாகும்.அஸ்தம்: உங்கள் செயல் லாபத்தை உண்டாக்கும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.சித்திரை 1,2: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.

துலாம்

சித்திரை 3,4: இன்று தெய்வ அருள் உண்டு. புதிய சொத்துக்காக மேற்கொள்ளும் முயற்சி பலிக்கும்.சுவாதி: தடைபட்டிருந்த செயல்களை மீண்டும் தொடர்வீர். உங்கள் எண்ணம் நிறைவேறும்.விசாகம் 1,2,3: வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர். நண்பர்கள் உதவியுடன் வெற்றி அடைவீர்.

விருச்சிகம்

விசாகம் 4: பிரச்னை தேடிவரும். உங்கள் செயல்களில் கவனம் தேவை.அனுஷம்: இனம்புரியாத சங்கடத்திற்கு ஆளாவீர். மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். கேட்டை: வாகனப் பயணத்தில் கவனமுடன் செயல்படு. உங்கள் முயற்சியில் எதிர்பாராத சங்கடம் தோன்றும்.

தனுசு

மூலம்: உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னை நீங்கும்.பூராடம்: நேற்றைய முயற்சி இன்று லாபம் தரும். உங்கள் தேவை பூர்த்தியாகும்.உத்திராடம் 1: தடைபட்டிருந்த வேலைகளை மீண்டும் தொடங்குவீர். ஒரு சிலர் புதிய சொத்துக்கள் வாங்குவீர்.

மகரம்

உத்திராடம் 2,3,4: பொருளாதார நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வீடுதேடி வரும். திருவோணம்: வியாபாரத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு வெளிப்படும்.அவிட்டம் 1,2: பொது நலனில் ஈடுபட்டிருப்போரின் செல்வாக்கு உயரும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்.சதயம்: உங்களைச்சுற்றி இருப்பவர்களைப் பற்றி தெரிந்து கொள்வீர். சாதுரியமாக செயல்படுவீர்கள்.பூரட்டாதி 1,2,3: உறவினர் ஆதரவுடன் ஒரு செயலை செய்து லாபம் காண்பீர். எதிர்ப்பு விலகும்.

மீனம்

பூரட்டாதி 4: வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சிப்பீர். விருப்பம் நிறைவேறும்.உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். மனதில் நிம்மதி உண்டாகும்.ரேவதி: அலுவலகத்தில் சில சங்கடம் தோன்றும். உங்கள் செயல் இழுபறியாகும். கவனமுடன் செயல்படுவது நல்லது.