இஸ்ரேலை ஈரான் தாக்கும் : பைடன் எச்சரிக்கை!

#SriLanka #Israel #Biden #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இஸ்ரேலை ஈரான் தாக்கும் : பைடன் எச்சரிக்கை!

உயர்மட்ட தளபதிகளை கொன்று குவித்த வான்வழி தாக்குதலில் இஸ்ரேலை ஈரான் தாக்கும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தெரிவித்துள்ளார். 

சிரியாவில் உள்ள ஈரான் துணை தூதரகத்தை தாக்கியதை இஸ்ரேல் ஒப்புக் கொள்ளாவிட்டாலும், இந்த தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஈரான் கூறியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

எவ்வாறாயினும், எந்தவொரு தாக்குதலுக்கும் எதிராக தற்காத்துக் கொள்ள தயாராக இருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளதுடன், இஸ்ரேலின் பாதுகாப்பில் உறுதியாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தெரிவித்துள்ளார். 

ஈரானின் எச்சரிக்கையை கருத்திற் கொண்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது போர் அமைச்சரவை உறுப்பினர்களை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4