துலா ராசியினருக்கு விழிப்புடன் செயல்படுவதால் விருப்பம் நிறைவேறும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 weeks ago
துலா ராசியினருக்கு விழிப்புடன் செயல்படுவதால் விருப்பம் நிறைவேறும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வழக்கமான செயலால் லாபம் அதிகரிக்கும்.பரணி: நேற்றுவரை தடைபட்டிருந்த செயல் நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கார்த்திகை 1: உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: மனதில் புதிய திட்டம் உருவாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். ரோகிணி: மற்றவரை அனுசரித்துச்செல்வதால் நன்மை உண்டாகும். வீடு மனையில் பிரச்னை உண்டாகும். மிருகசீரிடம் 1,2: எதிர்பாராத பிரச்னை உருவாக வாய்ப்பிருப்பதால் செயல்களில் எச்சரிக்கை அவசியம்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்தவற்றில் ஏமாற்றத்தை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும்.திருவாதிரை: உங்கள் பெருமைக்காக ஆடம்பர செலவு செய்வீர். நட்பு வட்டம் விரிவடையும். புனர்பூசம் 1,2,3: முயற்சிகளில் தடை உண்டாகும். நிம்மதியாக இருப்பது நல்லது. செயல்களில் நிதானம் தேவை.

கடகம்

புனர்பூசம் 4: தொழிலில் இருந்த தடை நீங்கும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பூசம்: உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர். வரவு அதிகரிக்கும். ஆயில்யம்: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பெரியோர் ஆதரவால் முயற்சி வெற்றியாகும்.

சிம்மம்

மகம்: வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தடை விலகும். கடனாக கொடுத்த பணம் திரும்ப வரும்பூரம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர். வெளி வட்டாரத்தில் மதிப்புண்டாகும். தேவை நிறைவேறும்.உத்திரம் 1: சிந்தித்து செயல்படுவீர். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்.மேற்கொள்ளும் முயற்சி பலிக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: பழைய அனுபவம் கை கொடுக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த வரவு வரும்.அஸ்தம்: கேட்ட இடத்தில் இருந்து உதவி வரும். ஒரு சிலருக்கு வேலை குறித்த தகவல் வரும்.சித்திரை 1,2: பழைய பாக்கி வசூலாகும். குடும்ப நெருக்கடி விலகும். திட்டமிட்ட வேலையை ஒத்தி வைப்பீர்.

துலாம்

சித்திரை 3,4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மற்றவருடன் அனுசரித்துச் செல்வதால் நன்மை அதிகரிக்கும்.சுவாதி: பயணத்தில் சில பிரச்னைகளை சந்திக்க நேரும். உங்கள் செயலில் பலன் உண்டாகலாம்.விசாகம் 1,2,3: செயல்களில் தடுமாற்றமும் குழப்பமும் அதிகரிக்கும். விழிப்புடன் செயல்படுவதால் விருப்பம் நிறைவேறும்.

விருச்சிகம்

விசாகம் 4: நண்பர்கள் உதவியுடன் ஒரு செயலை மேற்கொள்வீர். உங்கள் எண்ணம் எளிதாகும்.அனுஷம்: மேற்கொள்ளும் முயற்சி பலிக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட முரண்பாடு விலகும்.கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர். உங்கள் அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும்.

தனுசு

மூலம்: உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும்.பூராடம்: மற்றவர்களால் முடியாத ஒரு செயலை சாதாரணமாக செய்து முடிப்பீர். உங்கள் திறமை வெளிப்படும்.உத்திராடம் 1: உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்.

மகரம்

உத்திராடம் 2,3,4: உங்கள் திறமை வெளிப்படும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர். திருவோணம்: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: நேற்றைய எண்ணம் நிறைவேறும். பெற்றோர் ஆதரவால் முயற்சி வெற்றியாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பீர். தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை.சதயம்: ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னை தீரும்.பூரட்டாதி 1,2,3: செலவு காரணமாக இருப்பு குறையும். குடும்பத்துடன் குதுகுலமாக இருப்பீர்கள்.

மீனம்

பூரட்டாதி 4: உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும். நினைத்ததை முடித்து திருப்தி காண்பீர்.உத்திரட்டாதி: வழக்கமான செயல்களில் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய நம்பிக்கை உண்டாகும்.ரேவதி: வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திட்டமிட்ட முயற்சிகளைத் தள்ளி வைப்பீர்கள்.