ரிஷப ராசியினருக்கு உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 weeks ago
ரிஷப ராசியினருக்கு உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: உங்கள் செயல் மதியம் வரை இழுபறி.அதன்பின் வெற்றியாகும். எதிர்பார்த்த வரவு வரும்.பரணி: பெரியோர் கூறும் ஆலோசனை முன்னேற்றத்தை உண்டாக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.கார்த்திகை 1: குழப்பம் குறையும். செயலில் தெளிவு ஏற்படும். நண்பர்கள் உதவியுடன் பிரச்னைக்கு தீர்வு காண்பீர். 

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நேற்று முயற்சித்த ஒரு செயல் இன்று நிறைவேறும். மதியத்திற்கு மேல் எதிர்பார்த்த வரவு வரும்.ரோகிணி: திட்டமிட்டு செயல்படுவதால் சங்கடம் நீங்கும். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும்.மிருகசீரிடம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். 

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: மதியத்திற்கு மேல் திடீர் பயணம் உண்டாகும். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும்திருவாதிரை: திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். மனதில் குழப்பம் அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: அவசர வேலை வந்து அலைக்கழிக்கும். உங்கள் செயல்களில் சங்கடம் உண்டாகும்.

கடகம்

புனர்பூசம் 4: எதிர்பார்த்த தகவல் வரும். முயற்சியில் இருந்த தடை விலகும். உடலில் உண்டான சோர்வு நீங்கும்.பூசம்: நேற்றைய எண்ணம் நிறைவேறும். வழக்கு விவகாரம் சாதகமாகும். நிதிநிலை உயரும். ஆயில்யம்: கூட்டுத் தொழில் தொடங்குவது பற்றி நண்பருடன் ஆலோசிப்பீர். மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்

மகம்: செயல்களில் இருந்த இடையூறு விலகும். தடைபட்ட வேலைகளை நிறைவேற்றுவீர். பூரம்: நீங்கள் நினைத்தது நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்உத்திரம் 1: பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமையை வெளிப்படும்.அதிக எண்ணம் நிறைவேறும். 

கன்னி

உத்திரம் 2,3,4: நேற்று இருந்த நெருக்கடி விலகும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.அஸ்தம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவீர். உறவு உங்களுக்கு ஆதரவாவர். சித்திரை 1,2: மதியம் வரை நெருக்கடி நீடிக்கும் அதன்பின் உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர். 

துலாம்

சித்திரை 3,4: உங்கள் செயல்களில் எதிர்பாராத தடை உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும்.சுவாதி: எதிர்பாராத ஒரு பிரச்னையை இன்று சந்திப்பீர். உங்கள் முயற்சி முன்னேற்றம் அடையும்.விசாகம் 1,2,3: செயல்களில் உண்டான சங்கடம் விலகும். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். 

விருச்சிகம்

விசாகம் 4: நினைத்ததை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.அனுஷம்: குடும்பத்தில் மற்றவர்களால் ஏற்பட்ட குழப்பம் விலகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படும்.கேட்டை: வியாபாரத்தில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். 

தனுசு

மூலம்: உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர். உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.பூராடம்: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வெளி வட்டார செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர். இழுபறியான விவகாரம் சாதகமாகும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: பிள்ளை நலனில் அக்கறை செலுத்துவீர். பொருளாதார சிக்கல் தீரும். திருவோணம்: சாதுரியமாக செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர். உங்களுக்கு எதிரானவர் மனம் திருந்துவர்.அவிட்டம் 1,2: உங்கள் செயலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். 

கும்பம்

அவிட்டம் 3,4: மனதில் இருந்த குழப்பம் விலகும். வரவு அதிகரிக்கும். அரசு வழியில் சில சங்கடம் உண்டாகும்.சதயம்: போட்டியாளர்கள் கை மேலோங்கும். நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும்.பூரட்டாதி 1,2,3: சட்டத்திற்கு புறம்பான விஷயங்களில் மனம் செல்லும். பண விவகாரங்களில் நிதானம் அவசியம். 

மீனம்

பூரட்டாதி 4: கவனமாக செயல்படுவீர். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். ரேவதி: தொழிலில் இருந்த தடை நீங்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும்.