அனுரவுடன் இணையும் அரசியலில் முக்கிய புள்ளி: நடந்த இரகசிய கலந்துரையாடல்

#SriLanka #Dallas Alagaperuma #AnuraKumaraDissanayake
Mayoorikka
1 year ago
அனுரவுடன் இணையும்  அரசியலில் முக்கிய புள்ளி: நடந்த இரகசிய கலந்துரையாடல்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பாராளுமன்றத்தில் இணைந்து அரகலய போராட்டத்தின் போது எதிர்க்கட்சியில் இணைந்து விட்டு வெளியேறிய டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட குழுவினர் தேசிய மக்கள் சக்தியில் இணைய முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களுடன் இது தொடர்பான பல கலந்துரையாடல்கள் இரகசிய மட்டத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் அறியமுடிகிறது. டலஸ் அழகப்பெருமவுக்கு மேலதிகமாக, சுதந்திர மக்கள் பேரவையின் உறுப்பினர்களான சரித ஹேரத் மற்றும் குணபால ரத்தனசேகர ஆகியோரும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதே வட்டாரங்கள் கூறுகின்றன.

 எனினும் இந்த குழுவை தேசிய மக்கள் சக்தியில் இணைக்க ஜேவிபி கட்சி தயக்கம் காட்டி வருவதாகவும், ஆனால் தேசிய மக்கள் கட்சி கட்சி எந்தவித தயக்கத்தையும் காட்டவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. தற்போதும் கூட சுதந்திர ஜனதா சபையின் குழு ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதுடன், பதவி தொடர்பான பிரச்சினை காரணமாக டலஸ் அழகப்பெரும கட்சியில் இணைவதற்காக நடத்திய பேச்சுவார்த்தை முறிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!