நாமல் ராஜபக்ச சிறந்த இளம் தலைவர், அவருக்கே முழு ஆதரவு - பொதுஜன பெரமுன எம்.பி
#SriLanka
#Election
#Namal Rajapaksha
#President
Lanka4
1 year ago

நாமல் ராஜபக்ச சிறந்த இளம் தலைவர். தூர நோக்கு சிந்தனை அவருக்கு உள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவைக் களமிறக்குவதற்கு கட்சி தீர்மானித்தால் அதற்கு முழு ஆதரவு வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ. டி. வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நபர்கள் முக்கியம் அல்ல, கட்சி எடுக்கும் முடிவே எமக்கு முக்கியம். எனக்குத் தனிப்பட்ட நிலைப்பாடு இருந்தாலும் கட்சியின் முடிவுக்கே கட்டுப்படுவேன்.
சர்வதேசத்துடன் சிறந்த தொடர்பைப் பேணி வருகின்றார். எனவே, இளைஞர் ஒருவருக்கும் வாய்ப்பளிப்பது நல்லது என தெரிவித்துள்ளார்.



