ஈரானிய தூதரக அதிகாரிகளின் கட்டத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் : 07 பேர் உயிரிழப்பு!
#SriLanka
#Israel
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரக அலுவலக கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 7 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ஈரானிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
ஒரு மூத்த தளபதி, பிரிகேடியர் ஜெனரல் முகமது ரேசா சாஹேடி மற்றும் அவரது துணை, பிரிகேடியர் ஜெனரல் முகமது ஹாடி ஹாஜி-ரஹிமி ஆகியோர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அடங்குவதாக கூறியுள்ளார்.
ஈரான் தூதரகத்தை ஒட்டியுள்ள கட்டிடத்தின் மீதான தாக்குதலுக்கு ஈரான் மற்றும் சிரியா அரசுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
வெளிநாட்டு ஊடகங்களின் செய்திகள் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே