கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய ஈரான் நாட்டு பிரஜைகள் மீட்பு!

#SriLanka #world_news #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய ஈரான் நாட்டு பிரஜைகள் மீட்பு!

அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய ஈரான் நாட்டு மீன்பிடி கப்பலையும், அதன் பணியாளர்களையும் இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர். 

12 மணித்தியாலங்களுக்கு மேலாக கடற்கொள்ளையர்களுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பின்னரே இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.  

கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அரபிக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு இந்திய கடற்படை கப்பல்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. 

கப்பலில் இருந்த 23 பாகிஸ்தான் பிரஜைகள் அடங்கிய பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

 இந்தியப் பெருங்கடலில் உள்ள யேமன் தீவான சொகோட்ராவில் இருந்து தென்மேற்கே சுமார் 90 கடல் மைல் தொலைவில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், 35 கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்படையிடம் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4