மொஸ்கோ தாக்குதலுடன் தொடர்புடைய குழுவினர் தஜிகிஸ்தானில் கைது!

#SriLanka #Russia #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மொஸ்கோ தாக்குதலுடன் தொடர்புடைய குழுவினர் தஜிகிஸ்தானில் கைது!

ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள குரோகஸ் சிட்டி ஹால் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக மற்றொரு குழுவை தஜிகிஸ்தான் கைது செய்துள்ளது.

 இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 9 பேரை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு குழு கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. 

அந்த நபர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. தஜிகிஸ்தானின் வக்தாத் நகரில் கைது செய்யப்பட்ட அவர்கள், அந்நாட்டின் தலைநகரான துஷான்பேக்கு கொண்டு வரப்பட்டனர். 

கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற தாக்குதலில் சுமார் 143 பேர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு குழுவினர் இன்னும் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4