தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற கோர விபத்து : ஈஸ்டர் ஆராதனைக்காக சென்ற 45 பேர் பலி’!

#SriLanka #Accident #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற கோர விபத்து : ஈஸ்டர் ஆராதனைக்காக சென்ற 45 பேர் பலி’!

தென்னாப்பிரிக்காவில் ஈஸ்டர் ஆராதனையில் பங்கேற்க சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். 

வடக்கு கிழக்கு லிம்போபோ பிராந்தியத்தில் மோரியா நகரில் நடைபெற்று வரும் தேவாலய ஆராதனையில் பங்கேற்பதற்காக குறித்த குழுவினர் கபோரோனில் இருந்து பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாலத்தில் இருந்து குதித்து சுமார் 50 மீட்டர் உயரமுள்ள பாறையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் 8 வயது சிறுமி மட்டும் உயிர் தப்பியதாகவும், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!