ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!
#SriLanka
#Court Order
#Heroin
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
3.074 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டதை தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி அனுராதப்புர மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் கெக்கிராவை வீதி, தலாவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபராவார்.
இந்த வழக்கு நான்கு வருடங்களுக்கும் மேலாக அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், முறைப்பாட்டாளரால் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, மேற்படி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே