வவுனியாவில் பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிப்பு!
#SriLanka
#Vavuniya
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
வவுனியா பொலிஸ் நிலைய வளாகத்தில் வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் சாமந்த விஜயசேகர தலைமையில் 160 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று (21.03) அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா பிராந்திய நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுத்தூபியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், உயிரிழந்த பொலிஸாரின் குடும்ப உறுப்பினர்கள், ஓய்வுபெற்ற பொலிஸார், வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் , வவுனியா பிரிவிலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸார் எனப் பலரும் கலந்துகொண்டு உயிர் நீத்த பொலிசாருக்கு அஞ்சலி செலுத்தினர்.