ஆப்கானிஸ்தானில் கோர விபத்து : 21 பேர் பலி!

#SriLanka #Accident #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஆப்கானிஸ்தானில் கோர விபத்து : 21 பேர் பலி!

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 

வீதியில் ஓடிக் கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் மற்றும் எரிபொருள் பவுசருடன் மோதி கவிழ்ந்து தீப்பிடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

இந்த விபத்தில் மேலும் 38 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, கடந்த 10 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 1,600க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 4,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!