சிறைச்சாலையில் இலங்கை குறித்து பேசிய இம்ரான் கான்

#SriLanka #Protest #people #Prison #Pakistan #ImranKhan #economy
Prasu
2 years ago
சிறைச்சாலையில் இலங்கை குறித்து பேசிய இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் (பி.டி.ஐ.) தலைவரான இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள அடியலா ஜெயிலில் நிருபர்களிடம் உரையாடினார். 

அப்போது அவர், என்னுடைய அனைத்து கணிப்புகளும் உண்மையென நிரூபிக்கப்பட்டு உள்ளன.

பாகிஸ்தானில் அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்களிடம் ஒப்பந்தம் போடுவதற்காக, அவர்களிடம் பேச்சுவார்த்தை எதிலும் நாங்கள் ஈடுபடவில்லை என கூறினார். ஒவ்வொரு விசயமும் பொய்களை அடிப்படையாக கொண்டவை. பொய்யான தேர்தலை போல... பாதுகாப்பு அச்சுறுத்தலும் கூட ஒரு பொய்யே என்று கூறினார்.

2024 பொது தேர்தலில், பி.டி.ஐ. கட்சியானது திட்டமிட்டே வெளியேற்றப்பட்டது. ஆனால் வாக்காளர்கள், வாக்கு பதிவு நாளில் இதற்கு பழி தீர்த்தனர். எனினும், ஓட்டு வழியே ஏற்பட்ட மாற்றம் ஏற்று கொள்ளப்படவில்லை. 

தேர்தல் முடிவை மாற்றி, மோசடியில் ஈடுபட்டு தேசத்தின் நம்பிக்கை உடைத்து நொறுக்கப்பட்ட சூழலில், இலங்கையில் நடந்தது போன்று பாகிஸ்தானிலும் நடக்கும் என்று தன்னுடைய கணிப்பை அவர் வெளியிட்டு உள்ளார்.

சர்வதேச நாணய நிதியகத்திடம் இருந்து இறுதியாக ஒரு கடன் தொகையை பாகிஸ்தான் கேட்டு பெறவுள்ள சூழலில், பணவீக்கத்தின் புதிய அலை தோன்றியதும் நாட்டில், மக்கள் தெருக்களில் இறங்கி போராடும் நிலை ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, தேர்தல் மோசடிக்கு எதிராக, எங்களுடைய கட்சி அமைதியான வழியில் போராடும் என தெரிவித்ததுடன், நாங்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம் என்றும் கூறினார். 

அந்நாட்டில், ஏப்ரல் 2-ந்தேதி செனட் தேர்தல் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த தேர்தலிலும் கூட, குதிரை பேரம் நடைபெறும் என்று அவர் தன்னுடைய கணிப்பை வெளியிட்டு உள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4