2 ரஷ்ய ராணுவ அதிகாரிகளை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

#Arrest #International #Russia #Military #officer #HighCourt
Prasu
2 years ago
2 ரஷ்ய ராணுவ அதிகாரிகளை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2022 பிப்ரவரி மாதம் "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. 

ரஷியாவை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு போரிட்டு வருகிறது.

இப்பின்னணியில், பல்வேறு போர் குற்றங்கள் புரிந்ததாக ரஷிய ராணுவ அதிகாரிகள் மீது நெதர்லாந்து நாட்டின் ஹேக் (Hague) நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court) வழக்கு நடைபெற்றது.

இந்நிலையில், ரஷிய நீண்ட தூர ராணுவ விமான சேவையின் தலைவரான செர்ஜி கொபிலாஷ் (Sergei Kobylash) மற்றும் கருங்கடல் படை (Black Sea Fleet) ஆணையர் விக்டர் சொகோலோவ் (Viktor Sokolov) ஆகிய இருவரும் 2022 அக்டோபர் தொடங்கி 2023 மார்ச் வரையிலான காலகட்டத்தில், உக்ரைன் நாட்டின் மின்சார கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் பல மின்சார உற்பத்தி கிரிட்-களை முற்றிலும் நாசமாக்கிய குற்றத்திற்காக ஐசிசி (ICC) கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

 மின் கட்டமைப்பை நேரில் கண்டறிய நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் கரிம் கான் (Karim Khan) உக்ரைனுக்கு சென்று ஆய்வு செய்து அளித்த அறிக்கையின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice) ரஷியா உறுப்பினர் இல்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4