அம்பானி வீட்டு விசேஷத்தில் சமைத்து அசத்திய 13 இலங்கை சமையல்காரர்கள்!

இந்தியாவின் முதன்மை கோடீஸ்வரர்களின் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகனின் திருமண வரவேற்பு நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உணவு தயாரிப்பதற்காக இலங்கையைச் சேர்ந்த 13 பேர் அங்கு சென்றிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் நாடு திரும்பியுள்ளதாக அறிவிகக்ப்பட்டுள்ளது.
குறித்த 13 சமையல்காரர்களும் இலங்கையில் பிரபலமாக காணப்படும் உணவுகளை சமைத்து பரிமாறியுள்ளனர்.
இவர்களின் உணவுகளை உட்கொண்ட வாடிக்கையாளர்கள் கூறிய கருத்துக்கள், கூகுள் மதிப்புரைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இந்த 13 பேரும் குறித்த திருமண நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்தனர் என்பது சிறப்பம்சமாகும்.
இதேவேளை குறித்த திருமண வரவேற்ப்பு நிகழ்வில் இலங்கை மாத்திரம் அல்லாது, சீனா, துபாய், இங்கிலாந்து மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரபலமான சமையல்காரர்கள் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் இன் திருமண நிகழ்வு எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி மிகவும் கோலாகலமாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



