பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித்திற்கு பிணை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷன் சந்திரஜித் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பொரளையில் நேற்று (06.03) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, கைது செய்யப்பட்ட அவர் இன்று அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது 05 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கமைய அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



