உச்ச மட்டத்திற்கு செல்லும் வெப்ப சுட்டெண் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
#SriLanka
#weather
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களுக்கும் இரத்தினபுரி மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் கடுமையான வெப்பம் நிலவக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் வெப்ப சுட்டெண் அவதான மட்டத்திற்கு செல்லக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில், மாலை அல்லது இரவில் ஏற்படக்கூடிய சில மழையைத் தவிர, தீவில் முக்கியமாக வறண்ட வானிலை இருக்கும்.
ஆகவே மக்கள் அதிகமாக நீர் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும், திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.