பாடசாலை மாணவி ஒருவர் தவறி விழுந்து உயிரிழப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
கலவான பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் தவறி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி இன்று (06.03) காலை தவறி விழுந்த நிலையில் அருகில் இருந்த கான்கிரீட் சுவர் மாணவி மீது மோதியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த அவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீபாகம ஜெயந்தி மகா வித்தியாலயத்தில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 13 வயதுடைய மாணவியே மேற்படி சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகைளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.