சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
எதிர்வரும் சிங்கள இந்து புத்தாண்டுக்குப் பின்னர் பொதுத் தேர்தலுக்கான திகதிகள் அறிவிக்கப்படும் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
பல்வேறு சலுகைகள் காரணமாக எதிர்வரும் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அமைச்சர்கள் சிலர் அறிவித்துள்ள போதிலும், கிராம மட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கருத்து அதுவல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள வருடம் முடிவடைந்த பின்னர் பொதுத் தேர்தலுக்கான திகதி நிர்ணயம் செய்யப்படும் என கட்ட திஎல கூறுகின்றார்.
பொதுத் தேர்தலில் மொட்டு கட்சி பெரும்பான்மையை வெல்லும் என்பதில் உறுதியாக உள்ளோம் எனவும், பசில் கட்சியை வழிநடத்த தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.