வவுனியாவில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
#SriLanka
#Vavuniya
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
வவுனியா - நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (05.03) அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் அழுகிய நிலையில் காணப்படுவதால் உயிரிழந்தவரை அடையாளம் காணமுடியவில்லை எனவும், உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் சில தினங்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.