சபாநாயகருக்கு எதிராக 44 பிரேரணை கையளிப்பு!

#SriLanka #Parliament #speaker
Mayoorikka
1 year ago
சபாநாயகருக்கு எதிராக 44 பிரேரணை கையளிப்பு!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மீதான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் கையளிக்கப்பட்டது. 

 எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரினால் நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டது. 

 இந்த பிரேரணையில் 44 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ரோஹினி குமாரி விஜேரத்ன, ஹேஷா விதானகே, மனோ கணேசன், ரிஷாட் பதியுதீன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.எம்.மரிக்கார், ரஞ்சித் மத்தும பண்டார, தலதா அத்துகோரள, விஜித ஹேரத், சந்த் உள்ளிட்ட 44 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கினர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!