இலங்கையில் அடுத்த ஆட்சி ஜே வி பியின் கையிலா?
இதுவரை பேசாத அளவிர்க்கு ஜே வி பி கட்சியைப் பற்றி இலங்கையிலும் உலக இலங்கையர்கள் தரப்பிலும் பேசப்படுகிறது.
அதற்கு ஒரு முன்னேற்றமாக இந்தியா, ஜேர்மன் போன்ற நாடுகளும் அவர்களுக்கு அரங்கம் கொடுப்பதும் நடந்த கதையாகும்.
மக்கள் மத்தியிலும் இலங்கை மூவின மக்களிடையிலும் அவர்களின் உறவுக்கு ஒரு புதிய இரத்தம் ஊட்டப்படுகின்றது. அனைத்து தரபும் மக்களுக்கு வெறுப்பு இருப்பதாலும் இவர்களின் பக்கம் பலரின் பார்வைக் கடைக்கண் படுவதும் அவதானிக்ககூடியதாகவுள்ளது.
அத்தோடு சில கட்சிகளை பல யுத்க்திகளால் வெல்ல வைத்த சில கணினி பொறியியலாளர்களும் இவர்களுக்கு உதவுவதாகவும் கூறப்படுகிறது.
எதுவாகவிருந்தாலும் இலங்கியில் பண நாயகம் எழுதாத சட்டம் என்பதால் இறுதியில் வாக்குகளும் ஆதரவுகளும் விலைக்குள் மூழ்கலாம் எனவும் கூறப்படுகின்றது. மக்கள் விழிப்பாக இருக்கும் பொழுது ஒரு மாற்று விடி வெள்ளி உதிக்க வாய்ப்பு உள்ளது.
இலங்கை தேர்தலை இதுவரை மக்கள் மட்டுமோ வாக்கு வங்கியோ மட்டும் நிர்ணயிக்கவில்லை. அயல் நாடுகளும் துவேசங்களும் பணமுமே நிர்னயிபதும் கண்கூடாகவுள்ளது.