ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் : புதிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் : புதிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!

ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்கான விலைமனுக்கள் இன்று (05.03) கோரப்பட்டுள்ளன. . 

இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விலைமனுக்களை சமர்ப்பிக்க முடியும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

இந்த ஏல நடவடிக்கை நேரலையில் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இதனை ஆதரிக்க ஒரு சிறப்பு தொழில்நுட்ப குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

விலைமதிப்பீட்டு அறிக்கையை தயாரித்த பின்னர் அது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

 ஸ்ரீலங்கன் விமான சேவையின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முன்மொழியப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்  அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!