மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!
30 யூனிட்டுக்கும் குறைவான மின் பாவனையாளர்களுக்கு தற்போது விதிக்கப்படும் 12 ரூபா வீதம் 8 ரூபாவாக குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின் கட்டணத்தை 33.3 வீதமாக குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த மின்கட்டண திருத்தம் இன்று (04.03) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்தார்.
31 முதல் 60 யூனிட்டுகளுக்கு இடைப்பட்ட மின் நுகர்வோருக்கு 28 சதவீதம் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், 61 முதல் 90 யூனிட் வரையிலான மின் நுகர்வோருக்கான மின் கட்டணம் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, 91 முதல் 180 அலகுகளுக்கு இடைப்பட்ட மின் பாவனையாளர்களுக்கான மின்சாரக் கட்டணம் 24 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. 180 யூனிட்டுக்கு மேல் உள்ள வீட்டு வாடிக்கையாளர்களுக்கு 18 சதவீதம் மின்சார கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்களுக்கு 33 சதவீதமும், ஹோட்டல் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் 18 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவைச் சேர்ந்த மின் கட்டணம் 23 சதவீதமும், பொதுப் பிரிவினருக்கான மின் கட்டணம் 22 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தெரு விளக்குகளுக்கான மின் கட்டணத்தை 20 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.