மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த இலங்கையர்கள் குழுவொன்று மீட்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#Myanmar
Dhushanthini K
1 year ago

மியான்மரில் உள்ள மியாவாடி பகுதியில் சைபர் கிரைம் வலயத்தில் மறைந்திருந்த இலங்கையர்கள் குழுவொன்று மீட்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 56 இலங்கையர்களில் 08 பேர் இன்று (04.03) காலை மியன்மார் பாதுகாப்பு படையினரின் தலையீட்டினால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவினர் தற்போது மியாவாடி பொலிஸாரின் பாதுகாப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.



