சாந்தனின் உடலுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்ற சகோதரி!
#SriLanka
#Jaffna
#Death
#Tamil Nadu
Mayoorikka
1 year ago

சாந்தனின் பூதவுடல் அவரின் சொந்த ஊரான உடுப்பிடியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சாந்தனின் உடலை வீட்டிற்கு கொண்டுவரும் போது, அவரது உடன்பிறந்த சகோதரி ஆரத்தி எடுத்தமை அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்திருந்தது. “என் தெய்வம் வீட்டிற்கு வருகின்றது, யாரும் அழக் கூடாது“ என அவரது சகோதரி இதன்போது உருக்கத்துடன் கோரிக்கை விடுத்திருந்தார்.
அத்தோடு தன் மகனை உயிருடன் பார்க்க வேண்டும் என்று காத்திருந்த தாய் பல ஆண்டுகளுக்கு பின் உயிரற்ற உடலை கண்டு கதறி அழுதார்.



