கால்வாயில் நீராடச் சென்ற 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
எல்பிட்டிய, அபிட்டாங்கொட கால்வாயில் நீராடச் சென்ற சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சிறுமி தனது தாய் மற்றும் சகோதரியுடன் நேற்று (03) மாலை அபிட்டாங்கொடை கால்வாயில் நீராடச் சென்றுள்ளார்.
அங்கு, அவர்கள் மூவரும் நீரில் மூழ்கி, பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிறுமி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அவர் கனேகொட, கட்டபத்தவில் வசிக்கும் 14 வயதுடைய பாடசாலை மாணவியாவார். அவரது தாயும் சகோதரியும் தற்போது ஆபத்தான நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.