மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அமைச்சரவை விடுத்துள்ள அழைப்பு!

#SriLanka #Central Bank #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அமைச்சரவை விடுத்துள்ள அழைப்பு!

எந்தவொரு தரப்பினருக்கும் தெரியப்படுத்தாமல் சம்பளத்தை அதிகரிப்பதன் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் இன்று (04.03) அமைச்சரவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

மத்திய வங்கி ஊழியர்கள் அண்மையில் தமது சம்பளத்தை 70 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் இது சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு மத்திய வங்கி அதிகாரிகள் இவ்வாறு சம்பளத்தை உயர்த்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

இதன்படி இன்று பிற்பகல் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திற்கு மத்திய வங்கியின் தலைவர்கள் இது தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

மேலும், நாளை (05.03) நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கும் அரசாங்க நிதி தொடர்பான குழுவிற்கும் மத்திய வங்கியின் தலைவர்கள் அழைக்கப்பட்டு இவ்விடயம் தொடர்பில் ஆராயவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கும், நிதிக்குழு கூட்டம் நாளை முற்பகல் 11.30 மணிக்கும் நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!