இலங்கை வானிலையில் திடீர் மாற்றம்!

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் மற்ற பகுதிகளில், முக்கியமாக வறண்ட வானிலை உள்ளது. களுத்துறையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கிலிருந்து வீசும் அதேவேளை, நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கிலிருந்து அல்லது குறிப்பிட்ட திசையின்றி வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றானது மணிக்கு 20-30 கி.மீற்றர் வரையில் வீசும் என முன்னுரைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பில் இருந்து புத்தளம் மற்றும் மன்னாரிலிருந்து காங்கேசன்துறை மற்றும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் 40-45 கி.மீற்றர் வேகத்தில் வீசக்கூடும்.



