கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு உயரும் வெப்பநிலை : பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இலங்கையின் பல பகுதிகளில் நாளைய (04.03) தினம் வெப்பநிலையானது கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு உயரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு, சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் கவனத்திற்குரிய அளவில் இருக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, முடிந்தவரை நிழலாடிய இடங்களில் ஓய்வெடுப்பது, கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.