சாந்தனுக்கு அஞ்சலி செலுத்த வல்வெட்டித்துறை தீருவில் மயானத்தில் திரண்ட பெரும்திரளான மக்கள்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
சாந்தனுக்கு அஞ்சலி செலுத்த வல்வெட்டித்துறை தீருவில் மயானத்தில் திரண்ட பெரும்திரளான மக்கள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையாகி ஒன்றரை ஆண்டுகள் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சாந்தன் உயிரிழந்துள்ளார். 

 நேற்றுமுன்தினம் உயிரிழந்த சாந்தனின் உடலைச்சுமந்த ஊர்தி, வவுனியா கிளிநொச்சி பளை கொடிகாமம் ஊடாக வடமராட்சியை இன்று பிற்பகல் 3 மணிக்கு வந்தடைந்தது.

 வடமராட்சி கலிகைச்சந்தி, துன்னாலை, மந்திகை ஊடாக மாலிசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தை ஊர்திப்பவனி வந்தடைந்ததும் அங்கு மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அங்கிருந்து நெல்லியடி மத்திய பஸ் நிலையத்திற்கு பிற்பகல் 3மணிக்கு ஊர்தி வந்துசேர்ந்தது. அங்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

images/content-image/1709467996.jpg

அத்துடன் அஞ்சலி நிகழ்வில் வேலன் சுவாமிகள், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட மக்கள் பலர் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர். 

 அதனைத் தொடர்ந்து சாந்தனின் ஊர்திப்பவனி கரணவாய் நவிண்டில் உடுப்பிட்டி ஊடாக வல்வெட்டித்துறை தீருவில் மயானத்தை தற்போது வந்தடைந்துள்ளது.

images/content-image/1709468030.jpg

தீருவில் மயானத்தில் பெருந்திரளான மக்கள் திரண்டு உணர்வுபூர்வமாக கண்ணீரோடு அஞ்சலி செலுத்தினார்கள்.

 சாந்தனின் வித்துடல் நாளைய தினம் அவரது சொந்த ஊரான உடுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு கிரியைகள் இடம்பெற்று எள்ளங்குளம் மைதானத்தில் தகனம் செய்யப்படும்.

images/content-image/2023/02/1709476944.jpg

images/content-image/2023/03/1709476975.jpg

images/content-image/2023/03/1709476993.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!