போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் குழுக்களுக்கும் இடையில் பாரிய முரண்பாடு!
#SriLanka
#Police
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
போதைப்பொருள் கடத்தல் மீதான அழுத்தம் காரணமாக போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் குழுக்களுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் உருவாகியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அவர்களுக்கிடையே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் கொலைகளும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுரம் அதமஸ்தானத்திற்கு விஜயம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மேற்கண்டவாறு கூறினார்.
போதைக்கு அடிமையானவர்களின் புனர்வாழ்வு தொடர்பான புதிய வேலைத்திட்டம் மார்ச் 15ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.