நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் விவசாயிகளின் பிரச்சினைக்கே முன்னுரிமை : ரணில்!
#SriLanka
#Trincomalee
#Ranil wickremesinghe
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு சவால்கள் பல இருந்தாலும், விவசாய சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய விவசாய நவீனமயமாக்கல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருகோணமலை, கலமதியா பிரதேசத்தில் இடம்பெற்ற நெல் அறுவடை நிகழ்வில் கலந்து கொண்ட கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், திருகோணமலை மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் இந்தியாவுடன் இணைந்து செயற்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.