இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
#SriLanka
#weather
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
நாட்டின் பல பகுதிகளில் இன்று (03.03) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னுரைத்துள்ளது.
திணைக்களத்தின் அறிவிப்பின்படி, மாலை அல்லது இரவு வேளையில் களுத்துறை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.