மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க துரித நடவடிக்கை : ஜனாதிபதி வாக்குறுதி!

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மியான்மரில் சிக்கியுள்ள தனது மகனைக் காப்பாற்றுமாறு தாய் ஒருவர் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இவர்கள் எங்கு சிக்கிக் கொண்டார்கள் என்பதில் மியான்மர் அரசுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. பயங்கரவாதக் குழுக்கள் அவர்களை அழைத்துச் சென்றன. ஆனால் நாங்கள் கூடிய விரைவில் பேசுகிறோம். அவர்களை மீட்டு நாட்டிற்கு அழைத்து வருவோம் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பில் மியான்மர் வெளியுறவு அமைச்சரிடம் பேசியுள்ளதாகவும், கூடுதலாக, தாய்லாந்து எல்லைக்கு அருகே மியான்மார் அமைந்துள்ளதால் அந்நாட்டு அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



