பச்சை பயறு க்ரேவி : ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்!

#SriLanka #Cooking #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
9 months ago
பச்சை பயறு க்ரேவி : ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்!

தேவையான பொருட்கள்:

 * பச்சை பயறு - 1 கப் 

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 

* சீரகம் - 3/4 டீஸ்பூன் 

* பட்டை - 2 துண்டு 

* கிராம்பு - 4

 * பிரியாணி இலை - 2

 * பெரிய வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது) 

* இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 1/2 டீஸ்பூன்

 * தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)

 * குழம்பு மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்

 * மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

 * உப்பு - சுவைக்கேற்ப 

* தண்ணீர் - தேவையான அளவு 

* பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)

 * கொத்தமல்லி - சிறிது 

செய்முறை

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சை பயறை சேர்த்து சற்று நிறம் மாறி நல்ல வாசனை வரும் வரை வறுத்து இறக்கி, நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். *

 பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து நன்கு பொரிந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். 

 பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அடுத்து தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.  பிறகு அதில் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, கழுவி வைத்துள்ள பச்சை பயறை சேர்த்து கிளறி விட வேண்டும். 

பின் அதில் பச்சை பயறு வேக தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி, 7-8 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு லேசாக மசித்து விட வேண்டும். பின் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து அதில் பூண்டு பற்களை சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பச்சை பயறு கிரேவி தயார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!