கொழும்பு சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டார் சமன் ரத்நாயக்க!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க இன்று (02.03) பிற்பகல் கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார்.
அதன் பின்னர் அவர் மஹர சிறைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்ச்சைக்குரிய மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில் சமன் ரத்நாயக்க நேற்று (01.03) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
9 மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் நடத்திய விசாரணையின் பின்னர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர்கைது செய்யப்பட்டார்.
பின்னர், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.